Tuesday, May 31, 2011

விரைவில்....

ஒரு டைரியின் கைதி (சிறுகதையோ அல்லது கவிதையோ எழுதுவதாய் எண்ணம், கட்டுரையாகக் கூட இருக்கலாம்)...
அப்பவே சொன்னாங்க தலைப்பை வெச்சுக்கிட்டு கதையைத் தேடாதடான்னு :)
திரையிசையில் மாதங்கள் 
- மார்ச், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குப் பாடல் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஜனவரி மாதத்திற்கும் ஒரு நல்ல பாட்டு வேண்டும் (7G-யின் பாட்டு எனக்கு அவ்வளவு விருப்பமில்லை)


இப்போதைக்கு இவ்வளவுதான்.. இந்தப் பதிவினை நான் அடிக்கடி புதுப்பிப்பேன். 

Monday, May 30, 2011

இளையராஜாவின் இசையில் பிரபு.

இந்தப் பதிவில், என்னைக் கவர்ந்த ஐந்து பாடல்களைத் தருகிறேன். இதுதான் என்னுடைய முதல் பதிவு: இந்த வகையில். எப்படி வருகிறதென்று பார்ப்போம்.

இந்தப் பாடலில் எம். எஸ். வி-யின் பங்களிப்பு இருப்பினும், இங்கே நான் ராஜாவின் பாடலாகவே கணக்கெடுத்துக் கொள்வேன். எனக்கு மிகவும் பிடித்தது, இறுதியில் வரும் மழைத்துளி சத்தம். மிகவும் செயற்கையான ஓசை, இருந்தாலும், மழையின் ஓசை இவ்வளவு நன்றாக இருக்குமென கற்பனை செய்யத்தூண்டும்!
அடுத்து, ராஜகுமாரனில் வரும் "என்னவென்று சொல்வதம்மா....". பாலாவுக்கே உரிய குறும்பினைச் செய்ய ராஜா முழு சுதந்திரம் அளித்திருப்பார். நமட்டுச் சிரிப்பு வேறு, இடையிடையே!!
ஒரு கட்டத்தில் பிரபு நடித்த அனைத்துப் படங்களும் வெற்றிப் படங்கள். அதில் இதுவும் ஒன்று... மனோ என்று நினைக்கிறேன்... சரியாகத் தெரியவில்லை...
இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும், ராஜா அரை மணி நேரத்தில் இசையமைத்ததாய்க் கேள்வி... எந்த அளவு உண்மையோ தெரியாது, ஆனால் ஒவ்வொன்றும் முத்துக்கள். நான் சின்னப் பையனாய் இருந்த போது மனப்பாடம் ஆன பாடல்களில் இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் சேர்த்தி!!
"மாமர இலை மேலே மார்கழிப் பனிபோலே...." என்று ஏசுதாஸ் கூவும்முன் (அவர்தான் குயில் ஆயிற்றே...) பின்னணியில் வரும் குழலிசைக்கும் இவர் குரலுக்கும் ஒரு மிகப் பெரிய போட்டியே நடக்கும்... யார் தோற்றாலும், வெற்றி என்னவோ ராஜாவுக்குத்தான்.
இது ஒரு திடீர் பதிவு. தொடர்ந்தாலும் தொடரும்.