Sunday, September 25, 2011

ஏழாம் அறிவும் ஹாப்பி டேஸும்

 நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பிறகு கடைசியாக ஏழாம் அறிவு படத்தின் பாடல்கள் வந்தே விட்டன... என்னதான் ஹாரிஸ் ஜெயராஜாக இருந்தாலும் பாடல்கள் என்னமோ எனக்குப் பிடிக்கவே இல்லை. சிறந்த தொழில் நுட்பம், தெளிவான குரலமைப்பு, அனைத்தும் இருப்பினும் எப்போதும் ஹாரிஸின் பாடல்களில் அவருடைய முந்தைய படப் பாடல்களின் சாயல் இருப்பது தவிர்க்கவே முடியாது..

பாடல் தொடங்குவதற்கு முன்னர் யாரையாவது விட்டுக் கத்தச் சொல்வது, ராப் என்ற பெயரில் அர்த்தமில்லாத வரிகளை இடை சேர்ப்பு செய்வது என அவருக்கு என்று ஒரு பாணி அமைத்துக் கொண்டு, சில இயக்குனர்களின் விருப்பத்திற்கேற்பப் பாடல்களை அமைத்துத் தந்து கொண்டிருக்கிறார்.

இந்த முறை மட்டு சற்று வித்தியாசமாக -- "முன் அந்திச் சாரல்கள்" பாடல் எப்போதும் போல கார்த்திக் பாடும் ஒரு மென்னிசைப் பாடல். வித்தியாசம் என்னவெனில் ஹாரிஸ் இப்போது தெலுங்கு பக்கம் சென்று இசையெடுத்து வந்திருக்கிறார். இடையூறும் இசை மட்டும் எனக்கு ஒரு தெலுங்கு படப் பாட்டினை (ஹாப்பி டேஸ்) நினைவு படுத்துகிறது. மிகவும் சிறந்த பாடல் -- அந்தப் படத்தினை தமிழிலும் மறுபதிப்பு எடுத்து பிரகாஷ் ராஜ் வெளியிட்டார். விரைவாகவே திரையரங்குகளை விட்டு ஓடி விட்டது.


முதலில் ஏழாம் அறிவு: 


தெலுங்கு "ஹாப்பி டேஸ்"


 நன்றி: YouTube.